Ad Banner
Ad Banner
 பொது

இணைய விளையாட்டுகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை 

09/12/2025 05:16 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- இணைய விளையாட்டுகளின் போது சிறார்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையை அரசாங்கம் விரிவாக ஆராய்ந்து வரும் நிலையில், அது தொடர்பான கருத்துகள் மற்றும் உள்ளீடுகளைப் பெற பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்.

இணைய விளையாட்டு சூழலில் சிறார்களின் பாதுகாப்பு அபாயங்களை சமாளிப்பதில்  பொருத்தமான மற்றும் பயனுள்ள ஒழுங்குமுறைகள் குறித்து அரசாங்கத்திற்கு முழுமையான கண்ணோட்டம் கிடைப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

இணைய விளையாட்டு தளங்களில் உள்ள உள்ளடக்கம் தற்போது உரிமம் பெற்ற சேவை பிரிவில் சேர்க்கப்படவில்லை.

ஆயினும், உள்ளடக்கம் சட்டவிரோதமாக இருந்தால், 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் உட்பிரிவு செக்‌ஷன் 233-இன் கீழ் அல்லது தனிநபரோ அதிகாரிகளோ புகார் அளிக்கும்போது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தியோ நி சிங் விளக்கினார். 

''இந்த நடவடிக்கை பொருந்தக்கூடிய சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு உள்ளடக்கம் நீக்குதல், கோரிக்கைகள், மேல் விசாரணை அல்லது தொடர்புடைய வலைத்தளத்தின் மீதான கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் ஆகியவை அடங்கும்,'' என்றார் அவர். 

இன்று மேலவையில் இலக்கவியல் துறையில், இணைய விளையாட்டுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து செனட்டர் நோர்ஹஸ்மிமி அப்துல் கானி எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]