Ad Banner
 பொது

திரும்பப் பெறும் தொகையில் MHIT-ஐ இணைக்க இ.பி.எஃப்-உடன் பேச்சுவார்த்தை

29/01/2026 05:25 PM

கோலாலம்பூர், ஜனவரி 29 (பெர்னாமா) -- ஊழியர் சேமநிதி வாரியம் KWSP-இன் உறுப்பினர்கள் திரும்பப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பகுதி தொகையாக அடிப்படை எம்.எச்.ஐ.டி எனப்படும் காப்பீட்டு தகாஃபுல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் திட்டத்தைப் பெறுவது குறித்து ஆராய அவ்வாரியத்துடன் நிதியமைச்சு இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த அணுகுமுறை மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவின் அடிப்படையில் அரசாங்கம் ஒரு சிறந்த முறையை உருவாக்க எண்ணம் கொண்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

''தற்போது செஜாத்ரா கணக்கிலும், இ.பி.எஃப் இரண்டாவது கணக்கிலும் I-Lindung-ஐப் பயன்படுத்த அனுமதித்துள்ளோம். தீவிர நோய்களும் இதில் உட்படுத்தப்படுகிறது. எனவே, இந்த அடிப்படை காப்பீட்டில் உள்ள கொள்கையின் படி, திரும்பப் பெற அனுமதிக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பார்க்க இ.பி.எஃப் தரப்புடன் நாங்கள் இன்னும் கலந்துரையாடி வருகிறோம்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் 

நடப்பில் உள்ள காப்பீட்டு அம்சங்களின் மூலம் இணை-பணம் செலுத்தும் நடைமுறையைச் சேர்த்து செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் முறையை அமைச்சு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)