ஜாலான் பார்லிமன், ஜனவரி 29 (பெர்னாமா) -- BUDI95 எனப்படும் BUDI MADANI RON95 மூலம் மொத்த RON95 பெட்ரோல் உதவித் தொகையில் இருந்து இலக்கிடப்பட்ட உதவித் தொகைக்கு மாற்றுவது உதவித் தொகை கசிவைக் குறைத்து ஆண்டிற்குச் சுமார் 250 முதல் 400 கோடி ரிங்கிட் வரை நிதி சேமிப்பை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், உலக கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் பணப் பரிவர்த்தணை விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு இது உட்பட்டது என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட சேமிப்பு நடவடிக்கை மக்களுக்கான பாதுகாப்பைக் குறைப்பதன் பொருள் அல்ல.
மாறாகத் தகுதியான தரப்பினருக்கு உதவித் தொகைகள் இன்னும் சரியாகச் சென்றடையும் இலக்கைக் கொண்டது என்று நாடாளுமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் விவரிக்கப்பட்டிருந்தது.
அதைத் தவிர்த்து, உலக கச்சா எண்ணெய் விலைகள், சுத்திகரிப்பு செலவுகள், விநியோக செலவுகள் மற்றும் பணப் பரிவர்த்தணை விகிதத்தைக் கருத்தில் கொண்டு தானியங்கி விலை முறையான A.P.M அடிப்படையில் இன்னும் RON95 பெட்ரோலின் விலைநிர்ணயிக்கப்படுவதாகவும் நிதியமைச்சு தெளிவுபடுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)