கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- எதிர்கட்சி தலைவராக இருந்த டத்தோ ஶ்ரீ ஹம்சா சைநுடினை பதவி நீக்கம் செய்ய, பெர்சத்து ஒழுங்குமுறை வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் நாடாளுமன்றம் பெறவில்லை.
மக்களவையின் சட்டத்தின்படி, அந்த பதவி குறித்த அதிகாரப்பூர்வ ஆவணத்தை தமது தரப்பு பெற்றிருக்க வேண்டும் என்று மக்களவைத் துணைத் தலைவர் டத்தோ ரம்லி முஹமட் நோர் தெரிவித்தார்.
''எனவே இப்போதைக்கு, நானும் மற்றொரு துணைத் தலைவரும் எந்தவொரு உத்தரவுகளையும் பெறவில்லை. மேலும் காலியான பதவியைக் குறிப்பிட இடதுசாரிகளிடமிருந்தோ அல்லது எதிர்க்கட்சிகளிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் பெறவில்லை என்று நான் நம்புகிறேன். மக்களவை சட்டத்தில் அது எழுத்துபூர்வ வடிவில் இருக்க வேண்டும்,'' என்று அவர் கூறினார்.
இன்று மக்களவையில், ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என் ராயர் அவ்விவகாரம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ரம்லி அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)