Ad Banner
Ad Banner
 பொது

இராணுவப்படை உறுப்பினர் இந்திரனின் கதை, பூமிபுத்ரா அல்லாத சமூகத்தினருக்கு ஒரு முன்மாதிரி

23/02/2026 06:58 PM

ஜோகூர் பாரு, பிப் 23 - 2016-ஆம் ஆண்டு தனது தந்தை பணியாற்றும் போது, உயிரிழந்தாலும் மலேசிய இராணுவப் படை ATM சீருடையை அணியத் தேர்ந்தெடுத்த, 22 வயதான இராணுவப் படை உறுப்பினர் கே.இந்திரனின் கதை இந்நாட்டில், குறிப்பாக பூமிபுத்ரா அல்லாத சமூகத்தினரிடையே, முன்மாதிரியாக உயர்த்தப்பட வேண்டிய அசாதாரண உற்சாகத்தின் அடையாளமாக வர்ணிக்கப்பட வேண்டும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பட்டர்வொர்த் விமானப்படை தளத்திற்கு அருகே நிகழ்ந்த விமான விபத்தில் இறந்த, தனது தந்தை மேஜர் சி. காயாம்பூவை இழந்த சோகம் அப்போது 12 வயதாக இருந்த இந்திரனின் உற்சாகத்தை இழக்கச் செய்திருக்க வேண்டும்.

ஆனால், இந்திரனுக்கு அந்த இருண்ட தருணம் ஒரு சோகமான முடிவாக இல்லாமல்,  ATM-இல் தனது தந்தையின் போராட்டத்தைத் தொடர உத்வேகமாக இருந்ததாக, முன்னாள் மலேசிய இராணுவப் படை வீரர்கள் சங்கம், PVATM-இன் தலைவர்
 டத்தோ சஹாருடின் ஒமார் தெரிவித்தார்.

"இந்த வகையான மனப்பான்மை இருக்க வேண்டும். மேலும், இராணுவப்படை சேவையில் பங்கேற்க வாய்ப்பு குறைவாக உள்ள இந்திய மற்றும் சீன சமூகத்தினரிடையே ஒரு போராட்டமாக மாற்றப்பட வேண்டும். இந்த நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதையும் அதன் இறையாண்மை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதில் இது போன்ற ஒரு நல்ல மனப்பான்மை, ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.

ஒரு துயரச் சம்பவம், ஏமாற்றத்திற்கு வழிவகுக்காது, மாறாக அது ஒருவரின் அடையாளத்தையும் போராட்ட உணர்வையும் வடிவமைக்கும் என்பதை இன்றைய இளைஞர்களுக்குப் புரிய வைக்கும் வகையில் இந்திரனின் கதை சொல்லப்பட வேண்டும் என்றும் சஹாருடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)