Ad Banner
Ad Banner
 பொது

எச்ஆர்டி கோர்ப்பின் நிர்வாக மறுசீரமைப்பு செயல்முறை மார்ச் மத்தியில் நிறைவடையும்

23/02/2026 05:22 PM

கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக மறுசீரமைப்பு செயல்முறை மார்ச் மாத மத்தியில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிறைவு பெறும் தறுவாயில் உள்ள இச்செயல்முறை நிரந்தரமானது அல்ல என்றும் மறுசீரமைப்பு மேற்கொள்ள இன்னும் வாய்ப்பு உள்ளதாகவும் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

''எச்ஆர்டி கோர்ப் ஏற்கனவே அதன் கட்டமைப்பை நிறைவு செய்து வருகிறது. இது மார்ச் மாத மத்தியிலோ அல்லது இறுதியிலோ அது முழுமையாக நிறைவடையும்,'' என்று அவர் விளக்கினார்.

அண்மையில் மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் மூன்று நிர்வாக உறுப்பினர்களின் இடைநீக்கம் இயல்பானது என்று ரமணன் தெரிவித்தார்.

மேலும் காலத்திற்கேற்ற கழகத்தின் மேம்பாடுகளை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாக  அவர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)