Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தோமஸ் கிண்ணம்: சி ஜியாவின் பங்களிப்பு தேசிய அணியை வலுப்படுத்தும்

23/02/2026 07:24 PM

கோலாலம்பூர், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- டென்மார்க்கில் நடைபெறவிருக்கும் தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டியில் நாட்டின் தொழில்முறை ஒற்றையர் விளையாட்டாளர் லி சீ ஜியா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

அக்கிண்ணத்தை மீண்டும் வெல்வதற்கு 34 ஆண்டுகளாக மலேசியா போராடி வரும் நிலையில் சீ ஜியா போன்ற அனுபவம் வாய்ந்த விளையாட்டாளரின் பங்களிப்பு, நாட்டின் ஒற்றையர் பிரிவின் ஆற்றலை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அதன் துணை அமைச்சர் டாக்டர் முஹமாட் டௌபிஃ ஜொஹாரி தெரிவித்திருக்கிறார்.

''அவருக்கு மலேசியாவுக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்படும். இது மலேசியாவைப் பெருமைப்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை. பி.ஏ.எம்.-இன் ஒத்துழைப்புடன் இந்த தாமஸ் கிண்ணத்தை வெல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்,'' என்றார் அவர். 

தோமஸ் கிண்ண போட்டியில் மலேசியாவை பிரதிநிதிப்பதை முடிவு செய்வதற்கு முன்பு, மலேசிய பூப்பந்து சங்கத்திடம் சீ ஜியா சில நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டி, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி மே 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]