Ad Banner
Ad Banner
 உலகம்

வட சீனாவில் கடுமையான பனிப்புயல் 

23/02/2026 07:00 PM

சின்ஜியாங், 23 பிப்ரவரி (பெர்னாமா) -- வட சீனாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்புயல் மற்றும் பலத்த காற்று வீசி வருவதால், அங்கே வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அவசரகால மீட்புத் திட்டங்களை அதிகாரிகள் உடனடியாக முடக்கி விட்டுள்ளனர்.

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் எனும் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சாலைகளில் பனி குவிந்துள்ளதால், போக்குவரத்து தடை பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சாலைகளில் குவிந்துள்ள பனிகளில் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்றையும் பொருட்படுத்தாமல், மீட்புப்பணியாளர்கள் கார்களில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர்.

பாதுகாப்பு கருதி, பலர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]