ஹவாய், 16 பிப்ரவரி (பெர்னாமா) -- குமுறிக் கொண்டிருந்த கிலாவியா எரிமலை நேற்று வெடித்தது.
2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவுச் செய்யப்பட்ட எரிமலை வெடிப்பு இதுவாகும்.
எரிமலைக் குழம்புகள் வெளியேறுவதுடன், அதன் சாம்பல் காற்றில் கலக்கும் காட்சியை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், யூ.எஸ்.ஜி.எஸ் வெளியிட்ட காணொளியில் பதிவாகியுள்ளது.
42-வது முறையாக எரிமலை குமுறத் தொடங்கியதுடன், அந்நாட்டு நேரம்படி மதியம் 1:50-க்கு அது வெடிக்கத் தொடங்கியது.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி, ஹவாய் மாநிலம் பல எரிமலை வெடிப்பு சம்பவங்களைச் சந்தித்து வருவதாக யூ.எஸ்.ஜி.எஸ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]