Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 உலக் கிண்ண போட்டியில் ஈரானுக்கு பதிலாக இத்தாலியா

23/04/2026 06:04 PM

வாஷிங்டன், 23 ஏப்ரல் -- 2026 உலக் கிண்ண போட்டியில்  ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தரப்பு,  உலக காற்பந்து சம்மேளனம் FIFA --விடம் சிறப்பு கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம் அந்த கோரிக்கையை டோனால்ட் டிரம்ப் மற்றும் FIFA தலைவரிடம் முன் வைத்தாக, தூதர்  போலோ ஸம்போலி அமெரிக்க ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.

ஈரான் போர் தொடர்பாக போப்பாண்டவர் Leo முன்வைக்கும் விமர்சனங்களால், டோனல் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமருக்கும் ஆகியோருக்கிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த உறவை மீண்டும் மேம்படுத்தும் முயற்சியாக, போலோ ஸம்போலி  முன்வைத்த இந்த கோரிக்கை விளையாட்டு ரீதியில் மட்டுமின்றி அரசதந்திர முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த கோரிக்கை தொடர்பில்,  வெள்ளை மாளிகை, FIFA, இத்தாலிய காற்பந்து கூட்டமைப்பு மற்றும் ஈரானிய காற்பந்து கூட்டமைப்பு ஆகியவை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இறுதித் தகுதிச்சுற்று ஆட்டத்தில், போஸ்னியா மற்றும் ஹர்ஸ்கோவிடாவிடம் பெனால்டியில்  தோல்வியடைந்த இத்தாலி, தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதிபெறத் தவறியது.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)