Ad Banner
 பொது

BUDI95: 2026-இல் 250 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும்

11/02/2026 03:03 PM

கோலாலம்பூர், 11 பிப்ரவரி (பெர்னாமா) -- இலக்கிடப்பட்ட RON95 பெட்ரோலுக்கான உதவித் தொகையின் மூலம் இவ்வாண்டு குறைந்தபட்சம் 250 கோடி ரிங்கிட்டை சேமிக்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
 
உதவித் தொகை கசிவு உட்பட அண்டை நாடுகளுக்கு பெட்ரோல் கடத்தல் கும்பல்களின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டதன் வழி இச்சேமிப்பு சாத்தியமானதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

''இந்த வெற்றியின் காரணமாக, எஸ்.டி.ஆர் மற்றும் சாரா உட்பட மக்களுக்கு உதவ பல திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்த முடியும். இரண்டு நாட்களுக்கு முன்பு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இரண்டு கோடியே 20 லட்சம் மலேசியர்கள் மைகார்ட் வழியாக தலா 100 ரிங்கிட்டை பெற்றனர். இது அனைவருக்குமான சாரா. கற்பனை செய்து பாருங்கள், இரண்டு நாள்களில் நாங்கள் 20 கோடி ரிங்கிட்டை செலவிட்டுள்ளோம். 20 லட்சம் மக்கள் இதைப் பயன்படுத்தலாம். இரண்டு நாள்களில் மட்டும். வெளிப்படையான கொள்கைகளைக் கொண்ட அரசாங்க ஊழியர்களிடையே இது ஒரு வெற்றியாகும்,'' என்றார் அவர். 

2025-ஆம் ஆண்டு முழுவதும் BUDI95-இன் வழி பெறப்பட்ட மொத்த சேமிப்பு மற்றும் 2026-ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட சேமிப்பு உட்பட இச்சேமிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து, இன்று மக்களவையில் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபொங் குய் லும் எழுப்பியக் கேள்விகளுக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]