Ad Banner
 உலகம்

இந்தோனேசியாவில் வணிக விமானம் மீது தாக்குதல்; இருவர் பலி

12/02/2026 08:01 PM

இந்தோனேசியா, 12 பிப்ரவரி (பெர்னாமா) -- தெற்கு பப்புவா மாகாணத்தின் ,போவன் டிகோயல் பகுதியில் உள்ள கொரோவாய் விமான நிலையத்தில் சிறிய ரக வணிக விமானமான ஸ்மார்ட் ஏர், தரையிறங்கியபோது, ​​நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் அதன் விமானியும் துணை விமானியும் உயிரிழந்தனர்.

சம்பவத்தின்போது அந்த விமானத்தில் இரண்டு விமானிகளைத் தவிர்த்து, மேலும் 13 பயணிகள் இருந்தனர்.

துப்பாக்கிச் சூடு தொடங்கியதும், விமானிகளும் பயணிகளும் விமானத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள காட்டுக்குள் ஓடிவிட்டதாக போலீஸ் பேச்சாளர் கஹ்யோ சுகர்னிடோ தெரிவித்தார்.

எனினும், விமானியும் துணை விமானியும் கொல்லப்பட்ட வேளையில், அனைத்து பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர்.

1969-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில், இந்தோனேசிய கட்டுப்பாட்டின் கீழ் பப்புவா கொண்டுவரப்பட்டதிலிருந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே கொடிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)