வாலே டி'ஆஸ்டா, 08 பிப்ரவரி (பெர்னாமா) -- வட இத்தாலியில் ஏற்பட்ட பனிச்சரிவுகளால் குறைந்தது மூவர் உயிரிழந்தனர்.
எல்ப்ஸ் மலைத்தொடரில் நிலைமைகள் நிலையற்றதாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மீட்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
லோம்பார்டியில், அல்போசாகியாவிற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் இருவர் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ட்ரெண்டினோவில்,மர்மோலாடா மலைத்தொடரில் ஏற்பட்ட இரண்டாவது பனிச்சரிவில் புதைந்து மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
அதேவேளையில், ட்ரெண்டினோவில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகிய தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]