புத்ராஜெயா, பிப்ரவரி 08 (பெர்னாமா) -- உக்ரேன், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகளாவிய அமைதிக்கான முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியாவின் நிலையான உறுதிப்பாட்டை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டினார்.
''வட்டார மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரைப் பிரதமர் மோடியுடனான எனது கலந்துரையாடல்களில் இது சாதாரண பேச்சுவாரத்தைகளாகவோ அல்லது அரச தந்திர பரிமாற்றங்களாகவோ மட்டுமல்ல. மாறாக, நம்பிக்கை மற்றும் புரிதல் நிறைந்த உண்மையான நண்பர்களுக்கிடையேயான பரிமாற்றமாகும். எனவே, உலகத்திற்கான அனைத்து அமைதி முயற்சிகளையும் ஆதரிப்பதற்கான அவரின் நிலையான உறுதிப்பாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான இருவழி உறவுகளின் பிரதிபலிப்பாகச் சபா, கோத்தா கினபாலுவில் இந்திய தூதரகத்தைத் திறக்கும் இந்திய அரசாங்கத்தின் முடிவை மலேசியா முழுமையாக ஆதரிப்பதாக அன்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)