சிப்பாங், பிப்ரவரி 08 (பெர்னாமா) -- மலேசியாவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்பினார்.
மோடி மற்றும் இதர பேராளர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் இருந்து மாலை மணி 4.35க்குப் புறப்பட்டது.
அதில் அரச மலேசிய இராணுவப் படையின் முதல் படைப்பிரிவைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பு உட்பட மோடிக்கு முழு அரச மரியாதை வழங்கப்பட்டது.
மேலும், டெங்கில் மற்றும் பந்திங் அறிவியல் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமார் நூறு மாணவர்கள் மலேசிய மற்றும் இந்தியாவின் தேசியக் கொடியை அசைத்து அவரை வழியனுப்பினர்.
மேலும், மலேசியாவில் வாழும் பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் வகையில் சில கலாச்சார படைப்புகளும் இடம்பெற்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)