Ad Banner
 பொது

வெப்ப காலத்தில் சில தளர்வுகளை அமல்படுத்த கல்வியமைச்சு எண்ணம்

08/02/2026 05:02 PM

நிபோங் திபால், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- தற்போதுள்ள வெப்பமான வானிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி ஊழியர்களின் நலன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சு அக்கறைக் கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார். 

வெப்ப காலத்தில், பள்ளி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் குறிப்பாக பள்ளி சீருடைகளுக்குப் பதிலாக விளையாட்டு உடைகளை அணிவது தொடர்பாக அனைத்து பள்ளி தரப்புகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

''இந்த வானிலை பிரச்சனையை நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும், மெட் மலேசியா மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை உட்படுத்தி நாங்கள் முறையான வழிகாட்டிகளைக் கொண்டுள்ளோம் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். எனவே, அனைத்து பள்ளி நிர்வாகிகளும் அவ்வப்போது இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார் அவர். 

ஞாயிற்றுக்கிழமை, ஜாலான் சுங்கை ஆச்சேவில்  உள்ள மூத்த குடிமக்கள் நடவடிக்கை மையத்தில் அவர்களுக்கான திட்டமொன்றை தொடக்கி வைத்த பின்னர் நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]