புத்ராஜெயா, பிப்ரவரி 08 (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ அன்வாரும் நரேந்திர மோடியும் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களை பரிமாறிக் கொள்ளப்பட்டத்தைப் பார்வையிட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒலி மற்றும் ஒளி தயாரிப்பு துறை, பேரிடர் நிர்வகிப்பில் ஒத்துழைப்பு, ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும் தடுப்பதிலும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை குறித்த குறிப்புகள் உள்ளிட்ட கடிதப் பரிமாற்றத்தையும் இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர்.
இதைத் தவிர்த்து, அனைத்துலக Big Cats கூட்டணிக்கான கட்டமைப்பு ஒப்பந்தம்,இந்திய குடியரசு மற்றும் PERKESO இடையிலான ஊழியர்களின் காப்பீட்டுக்கான புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஆகியவையும் இப்பறிமாற்றத்தில் அடங்கும்.
மேலும், தொழிற்கல்வி பயிற்சி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரப் பராமரிப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் பரிமாற்றத்துடன், மலேசியா - இந்தியாவுக்கான தலைமை செயல்முறை அதிகாரி மன்ற கூட்டு அறிக்கையைச் சமர்ப்பிப்பதும் இந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
இதனிடையே இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மோடி மலேசியா - இந்தியா இடையிலான உறவுகளின் வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் நட்பு என்றக் கருப்பொருளில் புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)