Ad Banner
 விளையாட்டு

2026 சுக்மா: 80 தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

08/02/2026 05:07 PM

ஷா ஆலம், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- 2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில் 80 தங்கப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் அணி இலக்குக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் சிலாங்கூரில் நடைபெறவிருக்கும் அப்போட்டியில், தடகள மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களை வெல்லமுடியும் என்று அம்மாநிலத்தின் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் முஹமாட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

''நாங்கள் அனைத்து விளையாட்டுகளுக்கும் நன்கு தயாராக இருக்கிறோம். மேலும், மாநில விளையாட்டு மன்றத்தின் அளவில், நாங்கள் சுக்மா விளையாட்டு மட்டுமல்ல, பாரா-சுக்மாவுக்கும் விளையாட்டாளர்களை மேம்படுத்தி வருகிறோம்,'' என்றார் அவர். 

இன்று  2026 சிலாங்கூர் சுக்மா மற்றும் பாரா-சுக்மா விளையாட்டுப் போட்டிக்களுக்கான தன்னார்வலர்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின்னர் முஹமாட் நஜ்வான் அவ்வாறு கூறினார்.

2024-ஆம் ஆண்டு சரவாக் சுக்மா போட்டியில் சிலாங்கூர் 56 தங்கம், 64 வெள்ளி, மற்றும் 61 வெண்கலம் என மொத்தம் 181 பதங்கங்களை வென்றிருந்தது.
 
இவ்வாண்டு சுக்மா போட்டி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரையிலும், பாரா-சுக்மா போட்டி அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]