Ad Banner
 உலகம்

நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு; பலி எண்ணிக்கை 27-ஆக அதிகரிப்பு

08/02/2026 02:33 PM

மேகாலயா, 08 பிப்ரவரி (பெர்னாமா) -- வடகிழக்கு இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.

இச்சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடரப்பட்டு வரும் வேளையில் மீட்புக் குழுவினர் நேற்று மேலும் இரண்டு உடல்களை மீட்டனர்.

கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் உள்ள சுரங்கத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் எண்மர் காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுரங்கம் தொலைதூரப் பகுதியில் அமைந்திருப்பதால் மீட்புப் பணிகள் தடைபட்டன.

சம்பவ இடத்தை மாநில மற்றும் மத்திய ஊழியர்கள் பல மணிநேரம் பயணிக்க வேண்டியிருப்பதாக மாவட்ட துணை ஆணையர் மனிஷ் குமார் தெரிவித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]