ரஷ்யா, 09 பிப்ரவரி (பெர்னாமா) -- பாஷ்கோர்டோஸ்தான் பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்ததாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகமும் ரஷ்ய புலனாய்வாளர்களும் தெரிவித்தனர்.
15 வயதுடைய மாணவன் ஒருவன் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய புலனாய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
மாஸ்கோவிலிருந்து கிழக்கே சுமார் 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஃபா நகரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் மேலும் சில போலீஸ் அதிகாரிகளும், மாணவர்களும் காயமடைந்ததை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
மாணவர்களில் ஒருவரின் நடத்தைப் பிரச்சனை பற்றி அறிந்திருந்தும், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தொடர்பாக குற்றவியல் வழக்கைத் திறந்துள்ளதாக புலனாய்வுக் குழு குறிப்பிட்டுள்ளதை புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)