Ad Banner
 விளையாட்டு

2026 WINDY CITY ஸ்குவாஷ் போட்டி; காலிறுதியில் எஸ்.சிவசங்கரி தோல்வி

09/02/2026 07:51 PM

அமெரிக்கா, 09 பிப்ரவரி (பெர்னாமா) --  அமெரிக்கா சிகாகோவில் நேற்று நடைபெற்ற 2026 Windy City பொது ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நாட்டின் தேசிய ஸ்குவாஷ் வீராகனை எஸ்.சிவசங்கரி தோல்வி கண்டார்.

உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான எகிப்தின் நூர் எல்.ஷெர்பினியை தோற்கடிக்க தவறியதால் அவரால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

உலகின் ஆறாவது இடத்தில் உள்ள 27 வயதான சிவசங்கரி, 51 நிமிடங்கள் நீடித்த போட்டியில் கடுமையாக போராடினார்.

இறுதியில் 6-11, 11-6, 7-11, 11-7 மற்றும் 8-11 என்ற புள்ளில் அவர் தோல்வியடைதாலும் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

இந்தத் தோல்வி பிளாட்டினம் அளவிலான போட்டியில் மலேசியாவின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இதனிடையே, ஆடவர் பிரிவில் முதலிடத்தில் உள்ள ங் எய்ன் யோவ் மற்றும் வளர்ந்து வரும் வீராங்கனை அய்ரா அஸ்மான் ஆகியோர் இரண்டாவது சுற்றோடு தங்களின் பயணத்தை முடித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)