கோலாலம்பூர், டிசம்பர் 24 (பெர்னாமா) -- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரோ, அமெரிக்க தொடர்பு செயற்கை கோள் LMV-3யை ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ச்சியது.
அதிக எடை கொண்ட அதாவது 6 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுவது இதுவே முதல் முறையாகும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
“இன்றைய பணி இந்தியாவிற்கு ஒரு முக்கிய பெருமையைக் கொண்டு வந்துள்ளது. இந்திய ஏவுகணையைப் பயன்படுத்தி இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக் கோள் இதுவாகும். இது எல்.வி.எம்-3இன் கீழ் மூன்றாவது முழுமையான வணிகப் பணியாகும். மேலும், இது அதன் சிறந்த சாதனைப் பதிவை நிரூபித்துள்ளது” என்றார் வி. நாராயணன்.
ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோத்தாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிகப் பிரிவுNewSpace Indiaவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தில் BlueBird Block-2 என்ற செயற்கைக்கோளை சுமந்து LMV-3 விண்ணில் பாய்ச்சப்பட்டது.
மேலும், இது LVM-3இன் மூன்றாவது முழுமையான வணிகப் பணியாகும் என்று வி. நாராயணன் தெரிவித்தார்.
விண்வெளி அடிப்படையிலான தொலைபேசி சேவை இணைப்புக்கான இந்த செயற்கைக்கோள் அமெரிக்க நிறுவனமான AST SpaceMobileக்கு ஏவப்பட்டதாக அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)