Ad Banner
Ad Banner
 உலகம்

T20 : இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தைப் பாகிஸ்தான் புறக்கணிக்கும்

02/02/2026 07:13 PM

கொழும்பு, பிப்ரவரி 02 (பெர்னாமா) -- இலங்கை, கொழும்புவில் நடைபெறும் டுவெண்ட்டி20 கிரிக்கட் உலக் கிண்ணப் போட்டியில் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் தமது பரம வைரியான இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தைப் பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் நேற்று தெரிவித்தது.

எனினும், இவ்வாண்டு ஐசிசி உலக தி20 போட்டியில் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணி பங்கேற்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை நடத்தும் அனைத்து போட்டிகளிலும் விளையாட திட்டமிட்டிருந்தாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகளை இழக்க நேரிடும்.

கடந்தாண்டு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட இராணுவ மோதலைத் தொடர்ந்து அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் PCBஇன் அதிகாரப்பூர்வத் தகவலுக்காகத் தங்கள் தரப்பு காத்திருப்பதாக ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)