Ad Banner
Ad Banner
 பொது

நாட்டின் அரசியலமைப்பில் தேசிய மொழியின் நிலையைக் கருத்தில் கொள்ள வலியுறுத்து

12/12/2025 08:31 PM

லங்காவி, 12 டிசம்பர் (பெர்னாமா) --  சமயம், மதம் மற்றும் இன உணர்வுகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு கோரிக்கையிலும், நாட்டின் அரசியலமைப்பில் தேசிய மொழியின் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மலாய் மொழியின் நிலைப்பாடு தொடர்பான கூட்டரசு அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், தொடர்ந்து ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இதை நான் விளக்க விரும்புகிறேன். இது மலேசியா. மலாய் மொழி என்பது அதிகாரப்பூர்வ மொழி. ஒரு மொழியின் செய்தியைக் கொண்டு வர முயற்சிக்கும் எவரும், அதிகாரப்பூர்வ மொழியான மலாய் மொழி அனைத்து மலேசியர்களாலும் தேர்ச்சி பெற்ற மொழியாக உயர்த்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் குறிப்பிடவும் தெளிவுப்படுத்தவும் விரும்புகிறோம் என்றார் அவர். 

இன்று, லங்காவி, குவாவில் நோர் அல்-ஹிடாயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் டத்தோ ஸ்ரீ அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும், நாட்டின் அரசியலமைப்பில் மலாய் மொழியின் நிலைக்கு ஏற்ப அதன் கண்ணியம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் அதன் ஆளுமை வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் விளக்கினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)