Ad Banner
Ad Banner
 பொது

முறையான சட்ட வழிகள் மூலம் நிலப் பிரச்சனையைத் தீர்க்க அறிவுறுத்து

16/02/2026 05:35 PM

புத்ராஜெயா, 16 பிப்ரவரி (பெர்னமா) -- நில ஆக்கரமிப்பு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அதன் உரிமையாளர்கள் சுயமாக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, முறையான சட்ட வழிகளைப் பின்பற்றி அவ்விவகாரத்தை தீர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

முறையான சட்ட நடைமுறைகளின்றி, ஒரு நிலத்தில் உள்ள கட்டமைப்பை இடிப்பது, அதன் உரிமையாளருக்குச் சட்ட ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலீனா ஓத்மான் சைட் கூறினார்.

நிலப் பிரச்சனை பெரும்பாலும் நம்பிக்கை மற்றும் மதத்தின் அம்சங்களை உள்ளடக்கி இருப்பதால், அவை உணர்ச்சிபூர்வ விவகாரமாக கருதப்படுவதால், அது முறையாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அதனால்தான் நாம் நீதிமன்றத்தின் செயல்முறையை நம்ப வேண்டும். ஆனால், அவர்கள் பேசுவது ஆட்சேபனையைப் பதிவு செய்வது பற்றித்தான் என்று நான் நினைக்கின்றேன். பதிவில் இருக்க வேண்டும். போலீஸ் புகாராக இருந்தாலும் சரி, வழக்கறிஞர் கடித்ததைப் பயன்படுத்துங்கள். இல்லையென்றால், இது ஓரளவு இதுபோன்ற சூழ்நிலையில் மாறுகிறது. A தரப்பு ஆம் என்றும் B தரப்பு இல்லை என்றும். எங்கள் செயல்முறை இன்னும் ஒழுங்காக உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பின்பற்ற வேண்டும். ஆனால், நீங்கள் எடுக்க முடியாது. சட்டத்தை நீங்கள் உங்கள் சொந்த கையில் எடுத்தால், இவ்விவகாரம் இன்னும் உணர்ச்சிப்பூர்வமானதாக மாறிவிடும் என்று பயமாக இருக்கின்றது" என்றார் அவர். 

இன்று, புத்ராஜெயாவில் Fast Track Peluang Kedua 2.0 திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் அதனை கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)