டோஹா, பிப்ரவரி 18 (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு கத்தார் பொது டென்னிஸ் போட்டி...
இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களை கைப்பற்றி, உலகின் முன்னணி நட்சத்திர ஆட்டக்காரர்கள் இப்போட்டியை வெற்றிகரமாக தொடங்கியுள்ளனர்.
உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கர்லோஸ் அல்காராஸ் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெகுடன் விளையாடினார்.
கணித்தது போலவே, 6-4, 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று நான்கு முறை கிரான்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள அல்காராஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில், ஸ்டீபனோஸ் சிட்சிபாஸும் துனிசியாவின் மோயஸ் எச்சர்கிவும் மோதினர்.
இவ்வாட்டத்தில், 6-4, 6-4 என்ற நேரடி செட்களில் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆட்டத்தில், சிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவுடன் மோதவுள்ளார்.
ஜப்பானின் ஷிண்டாரோ மொச்சிசுகியுடன் விளையாடிய ரஷ்யாவின் கரேன் கச்சனோவும் முதல் சுற்று ஆட்டத்தில் சிரமத்தை எதிர்கொள்ளவில்லை.
இந்த ஆட்டத்தில், 6-1, 3-6, 6-4 என்ற புள்ளிகளில் கரேன் கச்சனோ வெற்றி பெற்றார்.
இதனிடையே, நடப்பு வெற்றியாளர் ஆண்ட்ரி ரூப்லெவ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாஙுடன் களம் கண்டார்.
இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேரடி செட்களில் டி ஜாஙை, ரூப்லெவ் தோற்கடித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)