Ad Banner
Ad Banner
 பொது

குறைதீர்ப்பாளரை உருவாக்குவது எஸ்.பி.ஆர்.எம்-இன் செயல்பாடுகளுடன் ஒன்றாக அமையாது

10/12/2025 04:56 PM

சிலாங்கூர், டிசம்பர் 10 ( பெர்னாமா) -- Ombudsman எனப்படும் குறைதீர்ப்பாளரை உருவாக்குவது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம்-மின் செயல்பாடுகளுடன் ஒன்றாக அமையாது என்று எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி வலியுறுத்தினார்.

நிர்வாகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் மலேசிய குறைதீர்ப்பாளருக்கு அரச மலேசிய போலீஸ் படை PDRM போன்ற பிற நிறுவனங்களுடன் எந்தவோர் அதிகாரமும் ஒன்றிணையாது என்றும் அவர் கூறினார்.

''எனவே, குறைதீர்ப்பாளர் என்பது வேறு விஷயம். பொது புகார்கள் பணியகம், அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் போன்றவற்றை இணைப்பது. எனவே, அவர்கள் நிதியுதவி ஆதரவு துறைகளிலும், ஒருவேளை ஜி.எல்.சி-இலும் எழும் பிரச்சினைகள் அல்லது நிர்வாகத்தைப் பார்க்கிறார்கள்.'' என்றார் டான் ஶ்ரீ அசாம் பாக்கி

இன்று மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக புன்ச அலம் வளாக எஸ்.பி.ஆர்.எம்-UiTM Inspira 2025 நிகழ்ச்சிக்குப் பின்னர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி அவ்வாறு குறிப்பிட்டார்.

தவறான நிர்வாகம், தவறான நடத்தை, தகவல் தெரிவிப்பவர் பாதுகாப்பு மற்றும் தகவல் சுதந்திரம் போன்ற பிரச்சினைகளை உள்ளடக்கிய விரிவான அதிகாரத்துடன் பொது புகார்களை நிர்வகிக்கவும் தீர்க்கவும் மலேசிய குறைதீர்ப்பாளரை ஒரு மத்திய நிறுவனமாக அரசாங்கம் நிறுவும் என்று கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)