Ad Banner
Ad Banner
 பொது

மலேசிய வழக்கறிஞர் மன்றம் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தது எஸ்.பி.ஆர்.எம்

03/12/2025 06:04 PM

புத்ராஜெயா, டிசம்பர் 03 (பெர்னாமா) -- விசாரணையில் உள்ள நபர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களை அழைக்கும்போது 2009ஆம் ஆண்டு  எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 46இன் விதிமுறைகளை மலேசிய வழக்கறிஞர் மன்றம் மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர்டான் ஶ்ரீ அசாம் பாக்கி மறுத்துள்ளார்.

2009ஆம் ஆண்டு  எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 30 உட்பிரிவு (1) மற்றும் 30 உட்பிரிவு (2)இன் கீழ் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காகச் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் வந்ததாகவும் அவர் விளக்கினார்.

''எஸ்.பி.ஆர்.எம் ரகசிய ஆலோசனை உட்பட தகவல்களைக் கோருவதில்லை. வழக்கறிஞர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் கேட்கப்படுவது அவர்களிடம் உள்ள ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமே. விசாரணை தொடர்பான முக்கியமான தகவல்களைக் கொண்ட ஒரு நபராக சட்டக் கொள்கை தெளிவாக உள்ளது. அங்கு சிறப்பு உரிமை அமலாக்க அதிகாரிகளால் உத்தரவிடப்படும்போது ஆஜராக வேண்டுடியதில் இருந்து ஒருவரையும் பாதுகாக்காது,'' என்றார் டான் ஶ்ரீ அசாம் பாக்கி.

மேலும்,  எஸ்.பி.ஆர்.எம் சட்ட விதிமுறைகளின்படி செயல்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகளைப் போல மட்டுமே ஆஜராக வேண்டும் என்றும் எந்தவொரு தரப்பின் வழக்கறிஞரின் நிலையையும் அது பாதிக்காது என்றும் அசாம் பாக்கி விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)