Ad Banner
Ad Banner
 பொது

அல்பர்ட் தேய் வீட்டில் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் ஆயுதங்கள் காட்டிய ஆதாரங்கள் இதுவரை இல்லை

15/12/2025 06:31 PM

ஷா ஆலம், டிசம்பர் 15 (பெர்னாமா) -- கடந்த நவம்பர் 28ஆம் தேதி பூச்சோங்கில் உள்ள தொழிலதிபர் அல்பர்ட் தேயின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் ஆயுதங்களைக் காட்டிய குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக்கூடிய எந்த ஆதாரத்தையும் சாட்சியையும் போலீஸ் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை.

சோதனையில் ஈடுபட்ட அனைத்து எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடமிருந்தும் வழக்கில் புகார் அளித்த அல்பர்ட் தேய் மனைவியிடமிருந்தும் தங்கள் தரப்பு வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் நடத்தப்பட்ட தொடக்கக்கட்ட விசாரணையின் வழி இது தெரிய வந்துள்ளதாகச் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

விசாரணை இன்னும் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வழக்கு விசாரணையின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவோர் ஆருடத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.

''சம்பவத்திற்குப் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதிக்கு வெளியே இருந்தால் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் விசாரணைக்கு உதவவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டனர். ஆனால் பின்னர் அழைக்கப்படும்போது வருவதற்கு அவர்கள் உறுதியளித்துள்ளனர்'', என்றார் டத்தோ ஷசெலி கஹார்.

சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து மறைக்காணி மற்றும் தொலைப்பேசி உரையாடல்களின் பதிவுகளையும் போலீஸ் பெற்றுள்ளதாகவும் இவை மேலும் சரிபார்ப்பு மற்றும் பகுப்பாய்விற்காகத் தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)