Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற பிரதமர் வாழ்த்து

09/12/2025 04:38 PM

கோலாலம்பூர், 09 டிசம்பர் (பெர்னாமா) -- தாய்லாந்தில், இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டிருக்கும் 2025 சீ விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் மலேசிய விளையாட்டாளர்கள் அனைவரும் வெற்றி பெற பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார். 

முழு கவனம், நிலையான சிந்தனை உட்பட முழு நம்பிக்கையுடன் போட்டியில் களமிறங்கும்படி தேசிய குழுக்கு ஊக்கமளித்த பிரதமர், ஒவ்வொரு மலேசியரின் பிரார்த்தனையும் அவர்களுக்கு இருப்பதாக தமது சமூக ஊடகப் பதிவில் கூறினார். 

இன்று தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரையில் 2025 சீ விளையாட்டுப் போட்டியும், டிசம்பர் 20-இல் இருந்து 26-ஆம் தேதி வரை 2025 ஏ.பி.ஜி எனப்படும் ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளன.  

2025 சீ விளையாட்டிற்காக 1,142 விளையாட்டாளர்களுடன் 515 அதிகாரிகள் அனுப்பப்பட்டிருக்கும் வேளையில், 2025 ஏ.பி.ஜி-க்கு 236 விளையாட்டாளர்களும் 117 அதிகாரிகளும் அனுப்பப்பட்டுள்ளனர். 

இந்த வாரம் முதல் சில விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில்,  மலேசியா மொத்தம் 200 பதக்கங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]