ஷா ஆலம், 26 ஜனவரி (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கிய பரிந்துரை மற்றும் பொதுமக்களின் கலக்கத்தைத் தொடர்ந்து, புக்கிட் தாகரில் நவீன பன்றி வளர்ப்பை மேற்கொள்ளும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இம்முடிவு, மாநில ஆட்சிகுழு மன்றத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைளுக்கு ஏற்ப இருப்பதோடு, அதற்கு மாற்றுப் பகுதியைக் கண்டறிய மாநில விவசாய மற்றும் உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் சிலாங்கூர் மந்திரி புசார் தெரிவித்தார்.
''புதன்கிழமை (கடந்த வாரம்), பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த திட்டத்திற்காக மாற்று இடங்களை கண்டறிய மாநில எம்.எம்.கே.என் கூட்டத்தில் ஏற்கனவே உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பிரதமரின் பரிந்துரையை நான் வரவேற்கிறேன்'', என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், ஷா ஆலமில், 2026 புத்தாண்டு உரையாற்றிய பின்னர்அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
இவ்விவகாரம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்லது ஒப்புதல் எதுவும் சமர்ப்பிக்கப்படாததால் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அத்திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என்ற பொதுமக்களின் கருத்து, குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், மாநில அரசு மேலும் எச்சரிக்கையுடன் அணுகும் நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)