Ad Banner
 விளையாட்டு

மலேசிய காற்பந்து சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் உடனடி பதவி விலகல்

28/01/2026 05:42 PM

சிலாங்கூர், ஜனவரி 28 (பெர்னாமா) -- மலேசிய காற்பந்து சங்கம் எஃப்.ஏ.எம்.-மின் நிர்வாகச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தன்னார்வ முறையில் உடனடியாக பதவி விலகியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தேசிய காற்பந்து நிர்வாகக் குழுவின் பிரச்சினைகள் பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவதைத் தொடர்ந்து அதன் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் சங்கத்தின் பொறுப்புகளின் அடிப்படையில் ஏகமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக எஃப்.ஏ.எம்-இன் இடைக்காலத் தலைவர் டத்தோ முஹமட் யூசோப் மஹாடி  தெரிவித்தார்.

''முதலாவதாக, எஃப்,ஏ,எம் அமைப்பின் நற்பெயர் மற்றும் நலன்களைப் பாதுகாத்து, ஒட்டுமொத்த மலேசியக் காற்பந்தையும் பாதிக்கக்கூடிய மோசமான அபாயத்தைக் குறைப்பதற்கு. இரண்டாவதாக, நல்லாட்சி மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளை நிலைநிறுத்துவது, குறிப்பாக, மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைகள் ஆகும். மூன்றாவதாக, பிஃபா மற்றும் ஏ.எப்.சி ஆகியவற்றை மதிப்பீடு செய்ய சரியான இடத்தை வழங்குவது.'' என்றார் டத்தோ முஹமட் யூசோப் மஹாடி 

கெலனா ஜாயா, விஸ்மா எஃப்.ஏ.எம்.-வில் 2025 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாவது சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)