Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

கிளப் உலக கிண்ணம்; சிட்டி உற்சாக வெற்றி

19/06/2025 03:32 PM

ஃபிலாடெல்பியா, 19 ஜூன் (பெர்னாமா) -- கிளப்புகளுக்கான உலக கிண்ண காற்பந்து போட்டி.

இன்று அதிகாலை நடைபெற்ற ஜி குழுவுக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி 2-0 என்று மிக எளிதில் மொரோக்கொவின் விடெட் ஏ.சி கிளப்பை வீழ்த்தி தனது போட்டியை உற்சாகமாக தொடங்கியுள்ளது. 

அமெரிக்காவின் ஃபிலாடெல்பியாவில் உள்ள லின்கன் ஃபைனென்சியல் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரண்டாம் நிமிடத்திலேயே கோல் அடித்த மென்செஸ்டர் சிட்டி அதன் மற்றுமொரு கோலை 42-வது நிமிடத்தில் போட்டது. 

இரண்டாவது பாதியில், சிட்டியே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும் எதிரணியின் தற்காப்பு அரண் பலமாக இருந்ததால் கோல்களின்றி அதே முடிவில் போட்டி நிறைவடைந்தது. 

அதே குழுவில் களம் கண்ட இத்தாலியின் யுவெந்தஸ் 5-0 என்று சவூதி அரேபியாவின் அல்-அயின் கிளப்பை அதிராடியாக தோற்கடித்துள்ளது. 

அதன் நான்கு கோல்கள் முதல் பாதியிலும் எஞ்சிய ஒரு கோல் இரண்டாம் பாதியிலும் போடப்பட்டது. 

இந்த வெற்றியின் வழி, யுவெந்தசும் மென்செஸ்டர் சிட்டியும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன

இதனிடையே, ஹார்ட் ராக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் எச் குழுவில் 1-1 என்று  சமநிலையில் முடிந்தது. 

ஸ்பெயினின் ஜாம்பவான் கிளப்பான ரியல் மெட்ரிட் - சவூதி அரேபியாவின் அல்-ஹிலால் கிளப்புடன் சமன் கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதே குழுவில் உள்ள ஆஸ்திரியாவின் ஆர்.பி சல்ஸ்பர்க், மெக்சிக்கோவின் பச்சுச்சா கிளப்பை வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

2-1 எனும் கோல்களில் வெற்றிப் பெற்றதன் வழி தற்போது எச் குழுவில் ஆர்.பி சல்ஸ்பர்க் முன்னிலையில் உள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]