Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

இடைத்தேர்தலின் வெற்றியும் இந்தியர்களின் வாக்குகளும்

27/04/2025 06:47 PM

கோலாலம்பூர், 27 ஏப்ரல் (பெர்னாமா) - ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி பெற்ற வெற்றி, பக்காத்தான் ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு  நிம்மதியை அளித்துள்ளதாக டான் ஶ்ரீ குமரன்  தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை அம்னோ  மீட்டுக் கொள்ளும், அதனால் ஆட்சி கவிழலாம் என்றும் மஸ்ஜிட் இந்தியா ஆலய விவகாரத்தில் இந்தியர்களுக்கு எதிராக  பரப்பட்டுவரும்  செய்திகளால் ஆயர்கூனிங் இடைதேர்தலில் மலாய்க்காரர்கள் இந்தியர்களின் வாக்குகள்  பாதிக்கக்கூடும் என்றும் எழுந்திருந்த பல ஆருடங்களை வாக்காளர்கள் முறியடித்துள்ளனர். 

கடந்த 1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சந்தித்த தோல்விக்குப் பின்னர் 1974-ஆம் ஆண்டு முதல்  தாப்பா தொகுதியை  தேசிய முன்ன்ணி தக்கவைத்து கொண்டு வருகிறது.

தாப்பா தொகுதியில் இடம் பெற்றுள்ள  ஆயர் கூனிங் சட்ட மன்ற தொகுதி வாக்காளர்கள்  பொதுவாகவே தேசிய முன்னணியின் மீது  பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்கள். 

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 31,281 வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர்  11,065 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வாக்காளர் 6,059 வாக்குகளும், பிஎஸ்எம். வேட்பாளர் 1,106  வாக்களும் பெற்றுள்ளனர். 

செல்லாத வாக்குகள் எண்ணிக்கை தெரியாத நிலையில், மொத்தம்  56 % விழுக்காட்டினர்  வாக்களித்துள்ளது மகிழ்ச்சியை அளித்தாலும் தேசிய முன்னணி வேட்பாளர் பெற்றுள்ள 30% விழுக்காடு வாக்குகள்  அடுத்துவரும் பொதுத் தேர்தலில்   அம்னோவிற்கு, பக்காத்தான் ஆட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய எச்சரிரிக்கையாக  எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டான் ஶ்ரீ குமரன் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தினர் எடுக்கும்  முடிவுகள்  மக்களிடையே குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மஸ்ஜிட் இந்தியா ஆலய விவகாரத்தைக் குறிப்பிடலாம்.  

இனம், சமயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்போது  சமய, சமுதாய தலைவர்களிடம்   கலந்தாலோசித்து  நடவடிக்கை மேற்கொண்டால் சமுதாய நல்லிணக்கம், சமய சகிப்புத்த்னையை  நிலைநாட்டமுடியும் என்பதனை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், இந்நாட்டு இந்தியர்கள் எந்தக் கட்சியில் உறுப்பியம் பெற்றிருந்தாலும் நாட்டுப்பற்று, நாட்டு நலனில் அக்கறைக் கொண்டவர்கள் என்பதை ஆயர் கூனிங் இடைத்தேர்தல் நிரூபித்துள்ளதை நினைவில் கொண்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மத்திய அரசாங்கத்தை டான் ஶ்ரீ குமரன் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)