Ad Banner
 விளையாட்டு

இங்கிலாந்து எஃப்.ஏ கிண்ணம்; வெளியேறியது மான்செஸ்டர் யுனைடெட்

12/01/2026 05:48 PM

லண்டன், 12 ஜனவரி (பெர்னாமா) -- இங்கிலாந்து எஃப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் வெளியேறியது. 

சொந்த அரங்கில் நடைபெற்ற  மூன்றாம் சுற்று போட்டியில்,  2–1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அணியிடம் தோல்வி கண்டதால், மான்செஸ்டர் யுனைடெட், அந்தத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது. 

இங்கிலாந்தின் முதன்மை கிளப்பான மான்செஸ்டர் யுனைட்டின் நிர்வாகி ரூபன் அமொரிம் கடந்த வாரம் நீக்கப்பட்டதை அடுத்து, அவ்வணி இந்த தோல்வியைச் சந்திக்க நேர்ந்துள்ளது. 

ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் பிரைட்டன் அடித்த முதல் கோலோடு முதல் பாதி நிறைவடைந்தது.

இரண்டாம் பாதியில் பிரைட்டனைத் தடுத்து நிறுத்த மான்செஸ்டர் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் 64-வது நிமிடத்தில் அது தனது இரண்டாவது கோலை அடித்தது. 

பின்னர், ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் பெஞ்சமின் வழி, மான்செஸ்டர் தனது ஒரே கோலைப் போட்டது. 

எஃப்.ஏ கிண்ணத்தை, மான்செஸ்டர் தவறவிட்டிருக்கும் நிலையில்,  தற்போது இங்கிலாந்து பிரீமியர் லீக் மட்டுமே அதன் கையில் இருக்கின்றது. 

ஆயினும், பட்டியலில் அது ஏழாவது இடத்தில் உள்ளதால் அந்த இலக்கை அடைவதும் மான்செஸ்டருக்கு கடினமாகியுள்ளது. 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)