கினாபாதாஙான், ஜனவரி 10 (பெர்னாமா) -- கினாபாதாஙான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல்களில் வாக்குப் பதிவு சுமார் 65 விழுக்காடுவரை இருக்கும் தேர்தல் ஆணையம் எஸ்பிஆர் கணித்துள்ளது.
மேலும், இவ்விரு இடைத்தேர்தல்களும் எவ்வித தங்கு தடையுமின்றி சுமூகமான முறையில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹருன்உத்தரவாதம் அளித்துள்ளார்.
"அனைத்துமே சுமூகமான முறையில் நடைபெறும். ஏதாவது பலவீனம் ஏற்பட்டால், எதிர்கால செயல்பாட்டில் நாங்கள் அதை மென்மேலும் மேம்படுத்துவோம். நன்றி," என்றார் அவர்.
இதைத் தவிர்த்து, இன்று காலை வேட்புமனு தாக்கல் சுமூகமாக நடைபெற்றதில் தாம் நிறைவு கொள்வதாக அவர் கூறினார்.
வரும் 24ஆம் தேதி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக் கடமையை சீராக நிறைவேற்ற வேண்டும் என்றும் டத்தோ ஶ்ரீ ரம்லான் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)