Ad Banner
 பொது

சுற்றுலாத் துறையினருக்கு தொழில் பாதுகாப்பு & சுகாதாரம் சார்ந்த இலவச பயிற்சி

12/01/2026 06:30 PM

சிலாங்கூர், ஜனவரி 12 (பெர்னாமா) -- சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள 10,000 பேருக்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த பயிற்சிகளை, மனிதவள அமைச்சு இலவசமாக வழங்கவுள்ளது.

சுற்றுலாத் துறை ஊழியர்கள் பணியிடங்களில் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கும் அபாயங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் திறனை பெற்றிருப்பதை உறுதி செய்வதோடு 2022-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்யும் வகையில் SITI எனப்படும் சுற்றுலாத் துறைக்கான பாதுகாப்பு அறிமுகப் பயிற்சித் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேசியத் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கழகம் NIOSH உடன் இணைந்து 26 லட்சத்து 50,000 ரிங்கிட் நிதி SITI பயிற்சித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.

சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா தொழில்துறையினர் தொழிலாளர்கள் அல்லது குத்தகையாளர்கள், ஊழியர்கள் மற்றும் தங்குமிட வழங்குநர்களின் சலுகைகளுக்காக இந்நிதி பயன்படுத்தப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்பதற்கான இணைய விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் www.niosh.com.my என்ற இணையத்தளத்தில் திறக்கப்படும் என்று அவர் மேலும் விவரித்தார்.

''இப்பயிற்சியில் பங்கேற்பதற்கான இணைய விண்ணப்பங்களுக்கு முடிவு நாள் கிடையாது, ஏனென்றால், மற்ற திட்டங்கள் ஒட்டி பல்வேறு முயற்சிகள் எடுக்கம் இது வழிவுகுக்கும். இது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை சம்பந்தப்பட்டும் இருக்கிறது.  தொழிலாளர்களில் பாதுகாப்பும் சுகாதாரமும்  மிக முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் 25ஆம் தேதியிலிருத்து இந்த விண்ணப்ப பாரம் திரக்கப்படும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் 

நாடு முழுவதும் உள்ள NIOSH அலுவலகங்களில் நேரடியாக அல்லது இயங்கலை வாயிலாக ஏழு மணி நேரம் மட்டுமே இப்பயிற்சித் திட்டம் நடத்தப்படுவதாக ரமணன் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)