Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

பிரச்சாரங்களில் 3ஆர்; துணைப் பிரதமர் வருத்தம்

20/04/2025 05:26 PM

அலோர் ஸ்டார், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலிலும், 3R எனப்படும் இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் உட்பட உணர்வைத் தூண்டும் முறையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி வருத்தம் தெரிவித்தார்.

பிரச்சாரங்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர பிறரைக் குறைத்து மதிப்பிட அல்ல என்று தேசிய முன்னணி தலைவருமான அவர் கூறினார்.

''இவ்விரு பிரச்சாரங்களும் உச்சக்கட்டத்தை எட்டுவதைக் நான் காண முடிகிறது. எனினும், பயன்படுத்தப்படும் பிரச்சார முறை இன்னும் பேசக்கூடாத அம்சங்களையும், தனிப்பட்ட பிரச்சனைகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களாக மாறிவிட்ட பிரச்சினைகள் குறித்தும் இருப்பது மிகவும் அதிருப்தி அளிக்கிறது,'' என்று அவர் விவரித்தார்.

இன்று, பேராக், லெங்கொங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் அஹ்மாட்  அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)