Ad Banner
Ad Banner
 அரசியல்

சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

29/11/2025 11:05 AM

கோத்தா கினபாலு, 29 நவம்பர் (பெர்னாமா) -- 14 நாள்கள் பிரச்சாரத்திற்குப் பிறகு இன்று 17-வது சபா மாநிலத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது. 

17 லட்சத்து 40,000 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தேர்தலுக்கான அனைத்து 882 வாக்குச் சாவடிகள் இன்று காலை மணி 7.30-க்கு திறக்கப்பட்டன.

சபாவின் 73 சட்டமன்றத் தொகுதிகளை வெற்றிகொள்ள இம்முறை 596 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். 

இதில் 73 சுயேட்சை வேட்பாளர்கள் அடங்கியுள்ள வேளையில் எஞ்சியவர்கள் 22 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்து போட்டியிடுகின்றனர்.  

இதனிடையே, 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. 

இன்று நண்பகல் மணி 12 தொடங்கி மாலை மணி 5.30-க்குள் அனைத்து வாக்குச் சாவடிகளும் கட்டம் கட்டமாக மூடப்படும் என்றும் அவ்வாணையம் கூறியது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)