நெதர்லாந்து, டிசம்பர் 23 (பெர்னாமா) -- நெதர்லாந்து, நன்ஸ்பீட் பகுதியில் ஆண்டு தோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பின்போது, கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர்.
பலத்த காயத்திற்கு உள்ளான மூவர் ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட அக்கார் ஓட்டுநர் அப்பகுதியில் வசிக்கும் 56 வயதான மூதாட்டி ஆவார்.
சொற்ப காயங்களுக்கு ஆளான அவர், தொடர் விசாரணைக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இருப்பினும், விரிவான விசாரணை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, உள்நாட்டு போலீஸ் அதிகாரி, என் கொனென் தெரிவித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)