கம்போடியா, டிசம்பர் 23 (பெர்னாமா) -- எல்லைப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில், அனைத்து விதமான விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு கம்போடியா வலியுறுத்தியது.
உடனடியாக அனைத்து விரோத நடவடிக்கைகளையும் நிறுத்தி, கம்போடிய வட்டாரத்தில் இருந்து தனது படைகளைத் தாய்லாந்து திரும்ப மீட்டுக் கொள்ள வேண்டும் என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் மாலி சோச்சீட்டா கேட்டுக் கொண்டார்.
வட்டாரத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கம்போடியா வலியுறுத்துவதாகவும் சோச்சீட்டா கூறினார்.
அதோடு, அக்டோபரில் கோலாலம்பூரில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து செயல்படுத்தவும் கம்போடியா உறுதி கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
''கம்போடியா, போர் நிறுத்தத்தின் விதிமுறைகளையும், கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த கூட்டுப் பிரகடனத்தையும் மதித்து, கண்டிப்புடன் கடைப்பிடிப்பதில் தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, மிகுந்த நல்லெண்ணத்துடனும் பொறுப்புடனும் செயல்படுகிறது,'' மாலி சோச்சீட்டா கூறினார்.
கம்போடியாவில், பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து நடத்தியதாகக் கூறும் ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதாகவும் தற்காப்பு தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு நியாயமான, சமமான மற்றும் நீடித்த தீர்வை கம்போடியா விரும்புவதோடு, தாய்லாந்து போரை நிறுத்தி தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்நாடு கோருகிறது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)