Ad Banner
Ad Banner
 பொது

வலுவான ஒத்துழைப்பிற்கு மலேசியாவும் ஜப்பானும் இணக்கம்

10/06/2026 06:15 PM

தோக்கியோ, ஜூன் 10 (பெர்னாமா) -- எரிசக்தி, வியூகத் தொழில் துறைகள் மற்றும் விநியோகச் சங்கிலி மீள்திறன் ஆகியவற்றின் வலுவான ஒத்துழைப்பிற்கு மலேசியாவும் ஜப்பானும் இணக்கம் தெரிவித்துள்ளன.

மேலும், தற்காப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு, வியூகத் தொழில்திறன், எரிசக்தி மாற்றம், நிதி ஒத்துழைப்பு, மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றுடன் வட்டார மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள், 
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி இடையே இன்று நடைபெற்ற சந்திப்பில் கல்துரையாடப்பட்டன.

கடந்த 2028-ஆம் ஆண்டு தொடங்கி 20 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு தலா இருபது லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு LNG-ஐ விநியோகம் செய்வதற்காக பெட்ரோனாஸ் மற்றும் ஜப்பானின் ஜெரா நிறுவனங்களுக்கு இடையே மலேசியாவும் ஜப்பானும்  நீண்ட கால விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக பிரதமர்  டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

"இது ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனை என்பதோடு இரு பெரும் நட்பு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் வெற்றியாகும்," என்றார் அவர்.
SUPER : டத்தோ ஶ்ரீ அமன்வார் இப்ராஹிம் / பிரதமர்

பிரதமராக பதவியேற்பிற்குப் பின்னர் ஜப்பானுக்கு மேற்கொண்ட தமது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தைக் குறிக்கும் வகையில், இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில்  நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் அதனைத் தெரிவித்தார்.

ஒரு கடல்சார் நாடாக, அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி கட்டமைப்பின் கீழ் ஜப்பானுடனான ஒத்துழைப்பை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் ஜப்பானுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், தமது சகாவுடன் இன்று சந்திப்பு நடத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை