Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் தேசிய அணி பங்கேற்கும் - ஈரான் அறிவிப்பு

10/05/2026 07:46 PM

தெஹ்ரான், 10 மே (பெர்னாமா) -- மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் ஈரானின் தேசிய அணி பங்கேற்கும் என்று அந்நாடு அறிவித்திருக்கிறது.

இருப்பினும்,  போட்டியை இணைந்து நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் தங்களின் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரானின் காற்பந்து கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

போட்டியில் நிச்சயமாகப் பங்கேற்கவுள்ளதாக ஈரான் தெரிவித்திருந்தாலும், அப்போட்டி குறித்து எழுந்துள்ள கவலைகளை ஏற்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அக்கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

போட்டியின் போது ஈரானிய அணிக்கு முறையான மரியாதை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஈரான் 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 

அவற்றுள், ஈரானிய விளையாட்டாளர்களுக்கு நிபந்தனையின்றி விசா வழங்குதல், போட்டியின் போது ஈரானியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மரியாதை அளித்தல், மற்றும் ஈரானிய அணி வீரர்களுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு வழங்குதல் ஆகியவை அடங்கும்.

ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டியில், ஈரான் ஜி குழுவில் இடம் பெற்றுள்ளது.

ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தொடக்க ஆட்டத்தில், ஈரான் நியூசிலாந்துடன் மோதவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)