Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதல்; 12 பேர் பலி

10/05/2026 07:43 PM

பான்னு, 10 மே (பெர்னாமா) -- பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு காவல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுமார் 12 காவலர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பான்னு எனும் நகரில்  குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தப்பட்டதில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இத்தாக்குதலுக்கு இத்தெஹாத்-உல்-முஜாஹிதீன் எனும் தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பாகிஸ்தான் போலீஸ் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)