Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல் பயணிகளுக்குப் பரிசோதனை

10/05/2026 07:40 PM

டெனெரிஃப், 10 மே (பெர்னாமா) -- ஹன்டா எனும் நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல் பயணிகளை வெளியேற்றும் பணியை ஸ்பெயின் இன்று தொடங்கியது. 

டெனெரிஃப் தீவுக்கு அருகே நங்கூரமிட்டுள்ள அக்கப்பலின் உள்ளே சென்ற சுகாதார அதிகாரிகள் கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் ஸ்பெயின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலின் பயணிகளை ஏற்றுக் கொள்ள ஸ்பெயின் முன்வந்ததைத் தொடர்ந்து, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான கேப் வெர்ட் அருகே மூன்று நாள்களாக நங்கூரமிட்டிருந்த எம்.வி ஹோண்டியஸ் எனும் அக்கப்பல், இன்று டெனெரிஃப் தீவில் நங்கூறமிட்டுள்ளது.

முதலில், ஸ்பெயின் நாட்டினர்  ஐவர் சிறிய படகில் இறக்கப்பட்டு, கரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 

அங்கிருந்து அவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு உள்ளூர் விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் மாட்ரிட்டிற்கு செல்வார்கள் என்றும், பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)