கோலாலம்பூர், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இன் புதிய தலைமை ஆணையராக, உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ ஶ்ரீ அப்துல் ஹலிம் முஹமட் அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் இந்நியமனம் வரும் மே 13-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது.
2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் துணை செக்ஷன் 5(1)-இன் கீழ், மாட்சிமைத் தங்கிய மாமன்னரால் இந்நியமனம் அங்கீகரிக்கப்பட்டதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்தார்.
இந்நியமனம் குறித்த பரிந்துரையை, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மாட்சிமைத் தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பித்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி கூறினார்.
அப்துல் ஹலிமின் பரந்த அனுபவமும் உயர்ந்த நேர்மையுமே, அதிகாரமளிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, ஊழலுக்கு எதிரான செயல்திட்டத்தைத் தீவிரப்படுத்த உதவும் என்று அரசாங்கம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]