Ad Banner
 உலகம்

எரிபொருள் விலை உயர்வு; பாலியஸ்டர் துணி உற்பத்தியாளர்கள் பாதிப்பு

25/04/2026 07:41 PM

குஜராத், 25 ஏப்ரல் (பெர்னாமா) -- ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள பாலியஸ்டர் துணி உற்பத்தியாளர்கள் மோசமான பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

Zara மற்றும் H&M போன்ற ஆடை அலங்கார சில்லறை விற்பனையாளர்களின் செலவுகளும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்குக் நகரமான சூரத்தில் உள்ள பிண்டல் சில்க் தொழிற்சாலையில் இயந்திரங்களில் துணி உற்பத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி, அவிச்சால் ஆர்யா தெரிவித்தார்.

''ஈரான் போரின் இரண்டு தாக்கங்கள்: தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் அதிக உற்பத்திச் செலவு. எனவே, இந்த இரண்டு சூழ்நிலைகளின் காரணமாக, இப்போதெல்லாம் உலகளாவிய தேவைகளை நம்மால் உண்மையில் திறம்பட பூர்த்தி செய்ய முடியவில்லை. இதுதான் தற்போது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் முக்கியத் தாக்கம்,'' என்றார் அவர்.

மேலும், அப்போரினால் ஏற்படும் எரிசக்தி நெருக்கடியினால் தமது பணியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, சமையலுக்கான எரிவாயு பற்றாக்குறையினால், தொழிலாளர்கள் பலர் ஊரை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஆர்யா குறைப்பட்டுக் கொண்டார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)