புது டெல்லி, மார்ச் 07 - இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு, LPG கலன் விலை 60 ரூபாய் உயர்ந்து 913 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எனினும், புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்டாலும் இந்தியா தடையற்ற எரிசக்தி இறக்குமதியைக் கொண்டிருக்கும் என்று இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்டிப் சிங் பூரி இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கான தடைகளில் 30 நாள்கள் விலக்கு அளித்துள்ள வேளையில், இது ஒரு குறுகிய கால நடவடிக்கை என்று கருவூலச் செயலாளர் ஸ்கோட் பெசென்ட் கூறினார்.
இந்நடவடிக்கை இந்திய நிறுவனங்கள் தற்போது கடலில் சிக்கியிருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்க வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில், ஜோர்யியாவில் எரிபொருள் விலை மோசமாக அதிகரித்து வருவதால் பயனீட்டாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எரிபொருள் விலையில் மிகப்பெரிய வாராந்திர அதிகரிப்பைக் காணும் மாநிலங்களில் ஜார்ஜியாவும் ஒன்றாகும்.
அதன் விலை, சராசரியாக ஒரு கலனுக்கு சுமார் 40.1 சென் உயர்வு கண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)