Ad Banner
Ad Banner
 விளையாட்டு

22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டத்தைக் கைப்பற்றியது ஆர்சனல்

20/05/2026 06:51 PM

லண்டன், மே 20 (பெர்னாமா) -- 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து பிரிமியர் லீக் பட்டத்தை வென்று ஆர்சனல் உலகெங்கும் உள்ள அதன் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

தனது 14-வது லீக் பட்டத்தை வென்றதன் வழி, இங்கிலாந்து காற்பந்து வரலாற்றில் அதிகப் பட்டங்களை வென்ற கிளப்களில் ஒன்றாக ஆர்சனல் உருவெடுத்துள்ளது.

இன்று அதிகாலை மான்செஸ்டர் சிட்டி போர்ன்மவுத் உடன் 1-1 என சமன் கண்டதை அடுத்து பிரிமியர் லீக் பட்டம் ஆர்சனலுக்கு சொந்தமானது.

புள்ளிப் பட்டியலில் சிட்டி இரண்டாம் இடத்தை பிடித்த நிலையில், இப்பருவத்தில் இன்னும் ஓர் ஆட்டத்தை கையில் வைத்திருந்தபோதும், 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கும் ஆர்சனல் வெற்றியாளரானது.

குறிப்பாக, நிர்வாகி மைக்கேல் ஆர்டெட்டா தலைமையிலான அவ்வணி கிண்ணத்தை கைப்பற்றி இருப்பது அவர்களின் ஆறு ஆண்டுகால வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வழிவகுத்தது.

கடைசியாக 2004-ல் லீக் பட்டத்தை வென்ற ஆர்சனல், தற்போது 82 புள்ளிகள் முதல் நிலையிலும் 78 புள்ளிகளுடன் சிட்டி அடுத்த நிலையிலும் உள்ளன.

இதனிடையே, ஆர்சனலின் எமிரேட்ஸ் அரங்கத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கிளப்பின் வெற்றியைக் கொண்டாடியதால், அந்த அரங்கம் விழாக்கோலமாக மாறியது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக லீக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததிலேயே திருப்தி அடைந்திருந்த ஆர்சனலுக்கு, இந்த வெற்றி மிகப்பெரிய நிம்மதியை அளித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)