Ad Banner
Ad Banner
 பொது

கமண்டர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு; மேலும் இருவர் கைது 

28/02/2026 04:41 PM

புக்கிட் காயு ஈத்தாம், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- புக்கிட் காயு ஈத்தாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் கமண்டர் வாகனம் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறையே 51 மற்றும் 58 வயதான உள்நாட்டு ஆடவர்கள் இருவரை, நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். 

''முதற்கட்ட கைது, விசாரணைகள் மற்றும் பலவற்றின் முடிவுகள் என்னவென்றால், மேலும் இருவரை அல்லது சந்தேக நபர்களை நாங்கள் அடையாளம் கண்டோம். அதுவே நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைக்கு வழிவகுத்தது. அடுத்த செயல்முறை முதல் 24 மணி நேரத்திற்குள் நடைபெறும். நாங்கள் இன்னும் அவர்களை விசாரிக்க முடியும். அந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களை தடுத்து வைக்க விண்ணப்பம் செய்வோம். இதுவரை விசாரணையின் முன்னேற்றம் அவ்வளவுதான்,'' என்றார் அவர். 

இன்று, புக்கிட் காயு ஈத்தாம், குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு வளாகம், ICQS-க்கு அலுவல் பயணம் மேற்கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]